• Glossary
  • Best Spine Specialist in Chennai
  • Best Doctors Qualified Staff
  • Best Treatments Satisfied Patients
அண்ணா நகரில் விளையாட்டு காயங்களுக்கு சிகிச்சை
அண்ணா நகரில் விளையாட்டு காயங்களுக்கு சிகிச்சை
16-December-2021

அண்ணா நகரில் விளையாட்டு காயங்களுக்கு சிகிச்சை

ஒரு விளையாட்டு ஆர்வலரின் விளையாட்டு ஒழுங்குமுறை அதற்கான சிகிச்சையின்றி பூர்த்தியடையாது. அதுவே அவரை மீண்டும் விளையாட தகுதியானவராக்கும். தடகள மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இடையே கடுமையான உடற்பயிற்சி பொருட்டு காயங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று.

அத்தகைய ஆர்வமே அவர்கள் அதிகப்படியாகவோ, தவறாகவோ அல்லது மேற்பார்வையின்றியோ உடற்பயிற்சி செய்தால் அவர்களுக்கு பேராபத்தாக மாறுகிறது.

கீழ்காணும் பத்திகளில் நாம் இந்த வகையான காயங்களுக்கான காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகளை சுருக்கமாக காண்போம்.

காயங்களுக்கான காரணங்கள்

உடற்பயிற்சிக்கோ விளையாட்டுக்கோ உடலை தயாராக்க தவறுவதே இத்தகைய காயங்களுக்கு காரணமாகிறது. மேலும் இந்த அலட்சியமே சிரமம், சுளுக்கு, கீறல், எலும்பு முறிவு போன்றவற்றின் சாத்தியத்திற்கு துவக்கமாகிறது.

இத்தகைய சூழ்நிலை விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியைத் தொடர அல்லது விளையாட்டைத் தொடர ஒரு தடையாக உள்ளது.

விளையாட்டு காயங்கள் மற்றும் விளையாட்டு காயங்கள் சிகிச்சை பட்டியல்

தசை பிடிப்பு, கிழிந்த முன் தசைநார், கிழிந்த இடைநிலை இணை தசைநார், முழங்காலுக்குக் கீழும், கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் முன் பகுதி பிளவு, அழுத்த முறிவு, குதிவாதம், கணுக்கால் சுளுக்கு, முழங்கை வலி, இடுப்பு வலி, குதிக்கால் தசைநாண் அழற்சி போன்றவை விளையாட்டுக்காயங்களுள் அடங்கும்.

தசை பிடிப்பு

அதிகப்படியான பயன்பாடு மற்றும் சோர்வால் தசை பிடிப்பு உண்டாகிறது. அழுத்தத்திற்கு உள்ளாகும் போது இது தசையுடன் தொடர்புடைய தசை நாரை சேதமாக்குகிறது. ஓடுதல், குதித்தல் மற்றும் தூக்குதல் உள்ளடக்கிய விளையாட்டுகளில் இந்த காயம் ஏற்படுகிறது.

குளிர் பேக் சிகிச்சை, வெப்பம், மின்சார தூண்டுதல், TENS மற்றும் அல்ட்ராசவுண்ட் சிகிச்சை தசை பிடிப்பிற்கு அளிக்கப்படுகிறது.

கிழிந்த முன் தசைநார்

கால்பந்து மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் முழங்காலில் முன் தசைநார் கிழிவது அடிக்கடி நிகழும்.

தொடை தசை பயிற்சி, நேராக கால் உயர்த்துதல், குதிகால் ஸ்லைடு உடற்பயிற்சி போன்றவை இந்த கோளாறுக்கு சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.

அறிகுறிகள் குறையாத துவங்கியதும் எடை தாங்குதல், பக்க வாட்டில் படுத்து காலை தூக்குதல் முதலிய உடற்பயிற்சிகள் வழக்கமாக்கப்படுகிறது.

வெப்பம் மற்றும் குளிர் சிகிச்சை, மின்சார தூண்டுதல் முறை, சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.

கிழிந்த இடைநிலை இணை தசைநார்

கிழிந்த இடைநிலை இணை தசைநார் மூன்று தரங்களாக வகைப்படுத்தப்படுகிறது. தொடை எலும்பு மற்றும் முழங்காலுக்கு கீழ் இருக்கும் காலை இணைக்கும் திசு பட்டையே இடைநிலை இணை தசைநார் எனப்படுகிறது.

நிற்பது, திரும்புவது போன்ற செய்கைகளை உள்ளடக்கிய பனிச்சறுக்கு, கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் இந்த கிழித்தல் நிகழ்கிறது. இதில் கால்பந்து வீரர்களே இந்த காயத்தால் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.

க்ரயோதெரபி, ஹைடிரோதெரபி, அல்ட்ராசவுண்ட் தெரபி மற்றும் குளிர் மற்றும் வெப்ப சிகிச்சை இத்தகைய காயங்களுக்கு அளிக்க படுகிறது.

முழங்காலுக்குக் கீழும், கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் முன் பகுதி பிளவு

முழங்காலுக்கும் கணுக்காலுக்கு இடையே உள்ள தசை, தசை நார், மற்றும் எலும்பு திசுவை இணைக்கும் இணைப்பு திசுவில் அழுத்தம் ஏற்படும்போது இத்தகைய பிளவு உண்டாகிறது.

தடகள வீரர்கள் மற்றும் தடகளம் அல்லாத கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் ஓடுபவர்களிடம் இந்த பிரச்னை உண்டாகிறது.

மென்மையான நீட்சி பயிற்சிகள் மற்றும் திசு மசாஜ் போன்ற சிகிச்சை முறைகளை காயம் பட்டவர்களுக்கு உடல் சிகிச்சையாளர்கள் அளிக்கின்றனர். மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வீக்கத்தை குறைக்க துடிப்பு உள்ள அல்ட்ராசவுண்ட் முறை சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

அழுத்த முறிவு

மேலும் கீழும் குதிக்கும் போது மீண்டும் மீண்டும் ஒரு இயந்திரத்தனமான அழுத்தத்திற்கு ஆளாவதால் அழுத்த முறிவு ஏற்படுகிறது. தடகளம், கூடைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளில் விரைவான இயக்கத்தால் இந்த கோளாறு நிகழ்கிறது.

ஓய்வு முதன்மை சிகிச்சையாக இருந்தாலும், TENS மற்றும் மின் தசை தூண்டுதல் போன்ற முறைகளாலும்  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குதிவாதம்

குதிகாலில் ஏற்படும் திசு சிதைவு நோய் என்பதே குதிவாதம் எனப்படும். அதிகப்படியான எடை தூக்குதல், அதிகப்படியான ஓடுதல் அல்லது குதித்தல் போன்றவற்றாலும் தரம் குறைந்த பாதணிகள் அணிவதாலும் குதிவாதம் நிகழும்.

தடகளம், கால்பந்து மற்றும் கூடைப்பந்து வீரர்களிடையே இந்த பிரச்சனை வழக்கமாக நிகழ்வது. சென்னை அண்ணா நகரில் கிடைக்கக்கூடிய விளையாட்டு காயங்களுக்கான சிகிச்சைகளில் கைமுறை சிகிச்சை, அர்தோட்டிக்ஸ்  மற்றும் அதிர்ச்சி அலை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கணுக்கால் சுளுக்கு

கணுக்காலை உருட்டுவது மற்றும் திருப்புவதால் என தசை நார்களை அதிகப்படியாக நீட்டுவதால் கணுக்கால் சுளுக்கு உண்டாகிறது. கால்பந்து மற்றும் கூடைப்பந்து வீரர்களுக்கு நிகழும் இந்த குறைபாட்டிற்கு அசையாமை, மின்சார தூண்டுதல் மற்றும் அல்ட்ராசவுண்ட் முறைகளாலும் சிகிச்சை அளிக்க படுகிறது.

முழங்கை வலி

டென்னிஸ், பாட்மிண்டன், ஈட்டி எறிதல்,வட்டு எறிதல் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டுகளில் முன்கை தசையை அதிகப்படியாக பயன்படுத்துவதாலும் மணிக்கட்டை அடிக்கடி முறுக்குவதாலும் முழங்கையை அடிக்கடி மடக்குவதாலும் முழங்கையில் தசைநார் அழற்சி ஏற்படுகிறது.

இதற்கு நீட்சி பயிற்சி, வலுப்படுத்தும் பயிற்சி, அல்ட்ராசவுண்ட் முறை மற்றும் இருமுனை குறுக்கீடு மின்னோட்டம் போன்ற முறைகளாலும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இடுப்பு வலி

அதிகப்படியாக பளு தூக்குதல் மற்றும் தீவிர பயிற்சியால் ஏற்படும் தசை சுளுக்கு என்பதே இடுப்பு வலி ஆகும். இந்த வலி இயந்திரத்தனமாகவோ ராடிகுலராகவோ இருக்கலாம். இது தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ், நீர் மூழ்குதல், பளு தூக்குதல், கோல்ஃப், கால்பந்து மற்றும் படகோட்டுதல் போன்ற விளையாட்டுகளில் நிகழ்கிறது.

வெப்பம் மற்றும் குளிர் சிகிச்சைகள், அல்ட்ராசவுண்ட், TENS மற்றும் மின்சார தசை தூண்டுதல் முறைகளாலும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இடுப்பு வீக்கம்

இடுப்பு இணைப்பு அருகே உள்ள எலும்பு, தசைநார் மற்றும் தசைகளுக்கு மெத்தையாக அமையும் பர்ஸா என்ற பகுதியில் உள்ள வீக்கம் தான் இடுப்பு வீக்கம் எனப்படுகிறது.

இது கால்பந்து, ஐஸ் ஹாக்கி மற்றும் பேஸ்பால் விளையாட்டுகளில் காணப்படுகிறது. இதற்கு அல்ட்ராசவுண்ட், மின்சார தூண்டுதல் முறைகள் மற்றும் குளிர் சிகிச்சை வழங்கப்படுகிறது.

குதிக்கால் தசைநாண் அழற்சி

அதிகப்படியான பயன்பாட்டால் தொடை தசைகளையும் பின் கால்கள் மற்றும் குதிகால் எலும்பை இணைக்கும் தசைநாரில் ஏற்படும் அழற்சி தான் குதிக்கால் தசைநாண் அழற்சி எனப்படுகிறது.

குதிகாலுக்கு முக்கியத்துவம் தரும் ஓடுதல், குதித்தல், டென்னிஸ், கூடைப்பந்து, ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டுகளில் இந்த குறைபாடு காணப்படுகிறது.

இதற்கு அல்ட்ராசவுண்ட், ஹைப்பர் தெர்மியா முறைகள் மற்றும் ஆழமான குறுக்கு உராய்வு மசாஜ் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன.

 

ரன்னர்ஸ் நீ

முழங்காலில் உள்ள குருத்தெலும்பு அதிக பயன்பாட்டால் அல்லது தாக்குதல் மற்றும் விழுதலால் சீரழியும் போது ரன்னர்ஸ் நீ குறை உண்டாகிறது.

இது நடத்தல், பனிச்சறுக்கு, குதிப்பது, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் ஏற்படுகிறது. இதற்கு அல்ட்ராசவுண்ட் சிகிச்சை தரப்படுகிறது.

அண்ணா நகரில் தலை சிறந்த விளையாட்டுக் காய சிகிச்சைகள்

தென்னிந்தியாவில் உள்ள சென்னை அண்ணா நகர் சிறந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு பேர் பெற்றது. அதில் ஒன்று டாக்டர் கருணாகரனின் எலும்பு மருத்துவமனையில் கிடைக்கும் ஒப்பற்ற சிகிச்சைகள். இந்தியாவின் சிறந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கருணாகரன் கடந்த இருபது வருடங்களாக எலும்பு சிகிச்சையில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளார்.

இவர் அறுவை சிகிச்சை மட்டுமின்றி அறுவை அல்லாத சிகிச்சை முறைகளிலும் தேர்ந்தவர் ஆவார்.

அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் நிபுணர் குழுவுடன் இவர் நாடி வருவோரின் வாழ்க்கை தரத்தை மீட்டு தருவதையே கொள்கையாக வைத்துள்ளார்.